போளூர், மே 5: போளூர் அருகே விவசாய பயன்பாட்டிற்காக செண்பகதோப்பு அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீரை கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை, நெல் ஆகியவற்றை பயிர் வைத்து வருகின்றனர். தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பயிர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பரிந்துரையின்படி வினாடிக்கு 150 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் (3ம் தேதி) முதல் வரும் 18ம் தேதி வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.
The post செண்பகத்தோப்பு அணையில் தண்ணீர் திறப்புகலெக்டர், எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர் போளூர் அருகே விவசாய பயன்பாட்டிற்காக appeared first on Dinakaran.