செண்டுமல்லி விலை வீழ்ச்சி

2 weeks ago 2

அரூர், ஏப்.10: தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர், பொம்மிடி, புட்டிரெட்டிப்பட்டி, சாமநத்தம், வேடகட்டமடுவு, ராமதாஸ்தண்டா, ஒடசல்பட்டி, கம்பைநல்லூர், இருமத்தூர், கோட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செண்டுமல்லி பூவிற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால், விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், நடப்பாண்டு அதிக பரப்பில் சாகுபடி பரப்பு அதிகரித்ததாலும் விளைச்சல் அதிகரித்ததை தொடர்ந்து, விலை மிகவும் குறைந்து, தற்போது ஒரு கிலோ ₹30 வரை விற்பனையாகிறது. கூலிக்கு கூட கட்டுபடி ஆகாது என்பதால், விவசாயிகள் பூக்களை பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர். இதனால் பூக்கள் வாடி தோட்டத்திலேயே காய்ந்து வருகிறது.

The post செண்டுமல்லி விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article