செஞ்சி, வேப்பூர் வார சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

3 weeks ago 4

 

செஞ்சி, அக். 25: செஞ்சி, வேப்பூர் வார சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் வார சந்தையில் ஆடு, மாடு, கோழி, கருவாடு, காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம். நேற்று காலை நடந்த வார சந்தையில் தீபாவளியை முன்னிட்டு பண்ணையாடு, வளர்ப்பு ஆடுகள் அதிகாலை 3 மணிக்கே விற்பனைக்கு வந்தன. ஆடுகள் வாங்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.

சந்தையில் ஒரு ஆட்டின் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை போனதால் மொத்தமாக ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. விலை அதிகமாக இருந்ததால் சில வியாபாரிகள் ஆடுகளை வாங்காமல் திரும்பிச் சென்றனர். வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடந்த ஆடு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய சந்தைக்கு கொண்டு வந்தனர்.

நேற்று நடந்த வாரச்சந்தையில் திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து பல்வேறு வகையான ஆடுகளை வாங்கி சென்றனர். ஒரு ஆட்டின் விலை ரூ.4000 முதல் ரூ.20 ஆயிரம் வரை எடைக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஆட்டின் விலை வழக்கத்தைவிட ரூ.500 முதல் ரூ.1000 வரை கூடுதலாக இருந்தது.

The post செஞ்சி, வேப்பூர் வார சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article