
சென்னை,
யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் செஞ்சிக் கோட்டை இடம்பெற்றுள்ளது. செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"கிழக்கின் ட்ராய்" என்று பிரபலமாக அறியப்படும் செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி. இந்த கம்பீரமான மலைக்கோட்டை இப்போது யுனெஸ்கோ பட்டியலில் இணைகிறது. இது தமிழ்நாட்டின் கலாச்சார பராம்பரியத்திற்கு ஒரு பெருமை மிக்க தருணம். சோழர் கால கோவில்கள், மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள், நீலகிரி மலை ரெயில் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட தமிழ்நாடு பராம்பரிய சின்னங்கள் வரிசையில் தற்போது செஞ்சியும் இணைந்துள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.