செங்கல்பட்டு: சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (31). கார் டிரைவர். இவர் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, தனது குடும்பத்துடன் காரில் கும்பகோணத்துக்கு சென்றிருந்தார். தீபாவளியை கொண்டாடிவிட்டு, நேற்று மீண்டும் காரில் அனைவரும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை செல்வம் ஓட்டிவந்துள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் பழவேலி பகுதியில் வந்தபோது, காரின் முன்பக்க இன்ஜின் பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது.
உடனே காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு குமார் உள்பட குடும்பத்தினர் அனைவரும் கீழே இறங்கி எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில், காரில் வந்த குடும்பத்தினர் செங்கல்பட்டு தாலுகா போலீசார், பேட்டரியில் மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு நிலவியது.
The post செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது: உயிர் தப்பிய குடும்பம் appeared first on Dinakaran.