
சென்னை,
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 10.40, 11, 11.30, மதியம் 12, 1.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56, ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.