செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மதுராந்தகம், மேல்மருவத்தூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், வந்தவாசி, திருவள்ளூர், சென்னை என பல பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில், பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையமும் இருப்பதால் ரயில் பயணிகளின் நடமாட்டமும், பேருந்து பயணிகளின் நடமாட்டமும் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்க்கு மிக முக்கியமான நகரமான செங்கல்பட்டில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
சாலையில் இரு புறமும் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பதாலும், ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றி வருவதாலும், சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து ஆட்டோ ஓட்டுவதாலும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் யூ டர்ன் அடிந்தாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறத்தில் ஆட்டோவாகத்தான் காணப்படுகிறது. எனவே உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் ஆட்டோக்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் செங்கல்பட்டு போக்குவரத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் கோரியுள்ளனர்.
The post செங்கல்பட்டில் சாலையை ஆக்கிரமித்து நிற்கும் ஆட்டோக்களால் மக்கள் அவதி appeared first on Dinakaran.