செங்கல்பட்டில் இ-சேவை மையத்தில் ஆதார் அப்டேட் செய்ய காத்துக்கிடக்கும் பொதுமக்கள்: கூடுதல் ஊழியர்கள் மற்றும் டோக்கன் வழங்க கோரிக்கை

1 month ago 8

செங்கல்பட்டு, அக்.5: செங்கல்பட்டு ரயில் நிலையம் வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதார் அப்டேட் செய்ய பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். அனைத்து அரசு துறைகளில் பெறப்படும் ஆவணங்களில் ஒன்றான ஆதார் கார்டுகளில் கட்டணமின்றி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டித்து ஆதார் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை காலம் என்பதால் ஆதார் கார்டுகள் கட்டணமின்றி அப்டேட் செய்வதற்கும், குழந்தைகளுக்கான ஆதார் கார்டுகளை எடுப்பதற்கும், ஏராளமான பொதுமக்கள் அரசு இ-சேவை மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால் இ-சேவை மையங்களில் ஆதார் எடுப்பதற்காக செங்கல்பட்டு ரயில் நிலையம் வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாலை முதல் வருகை தந்தனர்.

இதில், தினமும் 120 டோக்கன் மட்டுமே மையத்தில் வழங்கப்படுவதால் காலை முதலே மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஆதார் பெயர் மாற்றம், பெயர் நீக்கம், புதிய ஆதார் பெற, ஆதார் அப்டோட் செய்ய வரும் பலர் காத்திருந்து டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வருகின்றது. இதனால், இ-சேவை மையத்தில் இருந்த ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், செங்கல்பட்டு ரயில் நிலையம் வளாகத்தில் உள்ள இ-சேவை மையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது. எனவே கூடுதலாக ஊழியர்ளை நியமிக்கவும், கூடுதல் டோக்கன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கல்பட்டில் இ-சேவை மையத்தில் ஆதார் அப்டேட் செய்ய காத்துக்கிடக்கும் பொதுமக்கள்: கூடுதல் ஊழியர்கள் மற்றும் டோக்கன் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article