செங்கம் அருகே புதையலில் கிடைத்த தங்க நகை என போலியை விற்க முயன்ற 6 பேர் கைது

2 months ago 18
செங்கம் அருகே தங்கப்புதையல் எனக் கூறி போலி நகைகளை விற்க முயன்ற பெண் உள்பட 6 பேரை கைது செய்து, தப்பி ஓடிய இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெருமுட்டத்தில் தங்கப் புதையல் கிடைத்ததாக கூறி 141 போலி நாணயங்களை 4 லட்சம் ரூபாய்க்கு விற்று ஒரு கும்பல் ஏமாற்றியதாக லாரி ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் அளித்த புகாரில் அந்தக் கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், அந்தக் கும்பல் மீண்டும் சீனிவாசனை தொடர்பு கொண்டு 36 லட்சம் மதிப்பிலான இரண்டரை கிலோ தங்க நகைகள் இருப்பதாக,தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில், வேட்டவலம் பைபாஸ் சாலையில் ஸ்கார்பியோ காரில் வந்தவர்கள் சிக்கினர். டூவீலரில் வந்த இருவர் தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article