மதுரை, ஏப்.2: மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்-சந்திரவதனம் தம்பதியினர். அதே பகுதியில் சொந்தமாக ஜவுளிகடை நடத்தி வந்தனர். கடையை விரிவுபடுத்த நினைத்த சந்திரவதனம் கடந்த 2018ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிச்சைமணி என்பவரிடம் ரூ.5லட்சம் பணம் கடனாக வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக 6 மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாகவும், அதற்காக பிரபல வங்கியின் செக் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
ஆனால் 6 மாதங்கள் கழித்து பிச்சைமணி வங்கி கணக்கில் பணம் எடுக்க சம்மந்தப்பட்ட வங்கிக்கு சென்றபோது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. அதுதொடர்பாக பிச்சைமணி மதுரை நீதிமன்றத்தில் செக்மோசடி குறித்த வழக்கு தொடர்ந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதலாவது நீதித்துறை நடுவர்மன்ற மாஜிஸ்திரேட் ராஜபிரபு செக்மோசடியில் ஈடுபட்ட சந்திரவதனத்திற்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், வாங்கிய பணத்தை திரும்ப புகார்தாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
The post செக்மோசடி வழக்கில் ஓராண்டு சிறை appeared first on Dinakaran.