'சூர்யா 45' படப்பிடிப்பின் போது பிரபல நடிகை காயம்

3 hours ago 1

ஐதராபாத்,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்துள்ளனர். இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்றது. தற்போது ஐதராபாத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் 'சூர்யா 45' படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுவாசிகாவிற்கு படப்பிடிப்பின் போது அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. சண்டை காட்சியின் போது ஏற்பட்ட காயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

Read Entire Article