சூரி, நிவின் பாலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு

2 weeks ago 2

சென்னை,

பிரபல இயக்குனர் ராம் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதன் பின்னர் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த இரண்டு விழாக்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் பாரட்டுகளும் கிடைத்தன.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வைரலாகின. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Across seven seas and seven hills, a journey of destiny unfolds ✨ 7️⃣7️⃣⛰️#YezhuKadalYezhuMalai's TRAILER OUT NOW!Watch now ▶️: https://t.co/ex0IRfTHBE@sureshkamatchi @vhouseofficial @NivinOfficial @yoursanjali @sooriofficial @madhankarky @thisisysr @edit_mathipic.twitter.com/YsznjBx9Vy

— Think Music (@thinkmusicindia) January 20, 2025
Read Entire Article