விருதுநகர், மே 23: விருதுநகர் சாத்தூர் ரோட்டில் பிரபல தனியார் நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு பணியாற்றும் பிரான்சிஸ்(26), மரிய மிக்கேல் இருவரும் கடந்த மே 16ல் ஸ்டாக் எடுத்துள்ளனர். அப்போது பொருட்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துள்ளனர்.
அதில் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ராக்கம்மாள்(60), ஜெயா(56), வானமதி என்ற பாண்டியம்மாள்(55), விக்ரமங்கலத்தை சேர்ந்த முத்துபாண்டியம்மாள்(55) ஆகிய 4 பேரும் 12 நெய் பாட்டில்கள், 12 ஷாம்பு பாட்டில்கள் என ரூ.14,484 மதிப்பிலான பொருட்களை உள்ளாடைகளில் மறைத்து திருடி சென்றது தெரியவந்தது.
இந்த பதிவுகளை நிறுவன மேலாளருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 11 மணியளவில் பொருட்களை திருடி சென்ற 4 பெண்களும் சூப்பர் மார்க்கெட்டிற்கு மீண்டும் வந்தனர். அப்போது ஊழியர்கள் அனைவரும் சுற்றி வளைத்து 4 பெண்களையும் பிடித்து, திருடிய வீடியோ பதிவுகளை காட்டினர். இதையடுத்து திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பஜார் போலீசில் 4 பேரையும் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post சூப்பர் மார்க்கெட்டில் திருடிய 4 பெண்கள் கைது appeared first on Dinakaran.