சூதாடிய 3 பேர் கைது

4 weeks ago 6

தர்மபுரி, டிச.16: தொப்பூர் போலீஸ் எஸ்ஐ பிரபாகரன் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாப்பிரெட்டியூர் காட்டுவளவு விநாயகர் கோயில் அருகே, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(25), செல்வம் (48) மற்றும் கார்த்திக்(30) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. உடனே, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை கைப்பற்றினர்.

The post சூதாடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article