சூடான் நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை

1 week ago 6

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில் நாட்டில் ஆயுதப்படையினருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடிவருகின்றனர். துணை ராணுவப்படையினர் சூடான் தலைநகரில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சூடானில் 130 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சூடானில் பாலியல் குற்றங்கள் வெற்றிடத்தில் நிகழவில்லை, ஏனெனில் அவை ஆப்பிரிக்க நாட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் தற்போதைய உள்நாட்டுப் போருக்கு மத்தியில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களின் உடல்கள் போர்க் கருவிகளாகவும், போர் ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மத்திய சூடானில் பெண்கள் தாங்கள் அனுபவிக்கும் கும்பல் பலாத்காரம் மற்றும் சித்திரவதையின் வலியைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனஅந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post சூடான் நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article