சுவாமி ஏ.ஐ சாட் பாட்!

2 months ago 14

ஐப்பசி, கார்த்திகை வந்துவிட்டாலே எங்கும் சபரிமலை பக்தர்கள் மாலை போடுவதும், கோயிலுக்குச் செல்வதும் என எங்கும் பரபரப்பான சூழலைக் காணலாம். இந்த வருடம் இன்னும் சிறப்பாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜை நேரம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள ‘சுவாமி சாட்பாட் ’ (Swami Chatbot) எனும் செயலியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. AI தொழில் நுட்ப உதவியுடன் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்கள் கடந்து பாதையாத்திரை வரும் பக்தர்களை வீணாகக் காத்திருக்க வைக்காமல் பூஜைகள், கோயில் சிறப்புப் பூஜை கால காத்திருப்புகள் என அனைத்தும் இந்தச் செயலியில் கொடுக்கப்படுமாம். இதனைக் கொண்டு பக்தர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே தெளிவாக திட்டமிட முடியும்.

The post சுவாமி ஏ.ஐ சாட் பாட்! appeared first on Dinakaran.

Read Entire Article