சுற்றுலாப் பயணிகளுக்காக மதுரையில் ஹெலிகாப்டர் சேவை: விரைவில் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டம்

2 hours ago 3

மதுரை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மதுரையில் ஹெலிகாப்டர் சேவையை விரைவில் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பங்கேற்ற இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் எம். சுரேஷ் தொலைதூர நகரங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஆற்றல் மதுரைக்கு உள்ளது என்று கூறினார்.

தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்கள் மற்றும் யாத்திரை மையங்களுக்கு பயணிகள் விரைவாக செல்ல உதவும் வகையில் மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் சேவையை அறிமுகபடுத்த இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கொடைக்கானல், கன்னியாகுமரி, குற்றாலம் போன்ற இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் விரைவாக செல்ல இந்த ஹெலிகாப்டர் சேவை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடலோரங்களில் உள்ள சுற்றுலா மையங்கள் புனித தலங்களுக்கு செல்ல 12 முதல் 18 இருக்கைகளை கொண்ட சிறிய வகை விமான சேவையை அறிமுகபடுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் விரைவாக செல்லவும் நேரத்தை மிச்சப்படுத்தவும். ஹெலிகாப்டர் மற்றும் விமான சேவைகள் உதவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சுற்றுலாப் பயணிகளுக்காக மதுரையில் ஹெலிகாப்டர் சேவை: விரைவில் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article