சுருளிப்பட்டி முல்லை பெரியாற்றில் மலர் தூவி மரியாதை

6 months ago 30

 

கம்பம், அக். 11: பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட நாளை முன்னிட்டு சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 1895ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வினை நினைவு கூறும் விதமாக கம்பம் சுருளிப்பட்டி ரோட்டில் உள்ள சுருளிப்பட்டி முல்லை பெரியாற்றில் விவசாயிகள் சங்க தலைவர் பொன். காட்சிக்கண்ணன் தலைமையில் முல்லைப் பெரியாறு ஆற்றுக்கு விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் பொன் காட்சி கண்ணன் கூறுகையில்,‘‘தென் தமிழகத்தின் பசிப்பிணியை போக்கிய முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு முதன்முதலாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு 128 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. 129ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் முல்லைப் பெரியாறு நீருக்கு விவசாயிகள் சார்பாக மலர் தூவி வரவேற்பளிக்கின்றோம்’’என்றார்.

The post சுருளிப்பட்டி முல்லை பெரியாற்றில் மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article