சென்னை: "அறிவாலயத்தில் சுயமரியாதையை அடகு வைத்த அடியாள் சிவசங்கருக்கு சமூகநீதி பற்றி என்ன தெரியும்? அவர், வரலாற்றை படிக்க வேண்டும்" என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்களுக்கு மேலாகியும் அதை செயல்படுத்த போலி சமூகநீதி திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து பாமக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம், தமிழகத்தைத் தொடர்ந்து கொள்ளையடிக்கலாம் என்ற திமுகவின் கனவை கலைத்திருக்கிறது. அதனால் தான் அறிவாலய அடியாளை ஏவி விட்டு, சமூகநீதிக் காவலர் ராமதாஸுக்கு எதிராகவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகவும் ஓசையெழுப்ப வைத்திருக்கிறார்கள்.