சுப்மன் கில் செய்ததை விடவா கிராவ்லி செய்தது மோசம்..? இங்கிலாந்து பயிற்சியாளர் பதிலடி

8 hours ago 2

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சதமும் (104 ரன்), ஜேமி சுமித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56 ரன்) அரைசதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கே.எல்.ராகுல் 100 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்தது. ஜாக் கிராவ்லி 2 ரன்னுடனும், பென் டக்கெட் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இதில் 3ம் நாள் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களே எஞ்சிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. பென் டக்கெட் , ஜாக் கிராவ்லி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை பும்ரா வீசினார். அப்போது ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராவ்லி செயல்பட்டதுபோன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில் , ஜாக் கிராவ்லியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். கில் சில மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது, இந்திய அணியினர் திரண்டனர். இதனால், மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சுப்மன் கில் பேட்டிங் செய்யும்போது ஒரு சமயத்தில் மசாஜ் செய்வது போல் நேரத்தை வீணடித்ததாக இங்கிலாந்து பந்துவீச்சு பயிற்சியாளர் டிம் சவுதி தெரிவித்துள்ளார். அதை விட தாங்கள் செய்தது மோசமில்லை என்றும் அவர் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இரு அணியினரும் 3-வது நாளின் இறுதியிலும் உற்சாகமாக இருப்பதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. இந்திய அணியினர் எதைப் பற்றி புகார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று (அதாவது 2- நாள் ஆட்டத்தில்) பகலில் கில் களத்தில் மசாஜ் செய்து கொண்டுபடுத்துக் கொண்டிருந்தார். நாளின் இறுதி நேரம் நெருங்கும்போது அப்படி செய்வது விளையாட்டின் அங்கம்" என்று கூறினார்.

Read Entire Article