சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் உள்ளார் - நாசா விளக்கம்

2 months ago 11
விண்வெளியில் சுனிதா வில்லியம்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நாசா அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக விளக்கமளித்துள்ளது. ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசாவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 5ஆம் தேதி சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக அங்கு உள்ளனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதாவின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை மறுத்து நாசா, சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
Read Entire Article