திருவள்ளூர்: ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள சுதர்சனம் வித்யாஷரம் பள்ளியின் 11வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் தசரதன் தலைமை தாங்கினார். இயக்குநர் சரசுவதி, எஸ்.ஏ.பொறியியல் கல்லூரியின் இணைச் செயலாளர் கோபிநாத், இயக்குநர் சபரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சந்தோஷ்குமார் ஆண்டறிக்கையை வாசித்தார்.
விழாவில் தாளாளர் வெங்கடேஷ்ராஜா பள்ளி ஆண்டு விழா மலரை குறுந்தட்டு வடிவில் வெளியிட்டார். மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் 6 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாடவாரியாகவும், நிலைவாரியாகவும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய பரத நாட்டியமும், மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், நாடகங்களும் நடைபெற்றன. முடிவில் பள்ளியின் கல்விசார் இயக்குநர் சிவாஜி நன்றி கூறினார்.
The post சுதர்சனம் வித்யாஷரம் பள்ளி ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.