சுசூகி வி-ஸ்டிரோம் எஸ்எக்ஸ்

4 months ago 15

சுசூகி நிறுவனம், வி-ஸ்டிரோம் எஸ்எக்ஸ் என்ற புதிய மேம்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதுில், 249 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்-ல் 26.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்-ல் 22.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்கள் உள்ளன. எல்இடி ஹெட்லைட், டெயில் லைட்டுகள், டூயல் சானல் ஏபிஎஸ், புளூடூத் இணைப்புடன் கூடிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளன. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் தெரிவிக்கக் கூடிய ஓபிடி2 அம்சத்துடன் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.2.16 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post சுசூகி வி-ஸ்டிரோம் எஸ்எக்ஸ் appeared first on Dinakaran.

Read Entire Article