பணியிடங்கள் விவரம்:
1. Seaman: 33 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-5, ஒபிசி-8, எஸ்டி-1, எஸ்சி-6). வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.18,000- 56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிஸ்டு வெஷலில் 3 வருட பணி அனுபவம் அல்லது ஹெல்ம்ஸ்மேன்/சீ மேன் பணியில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Greaser: 11 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் பெட் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.cbic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் டைப் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, அதனுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட 4 போட்டோ, சுய முகவரியிட்ட 2 தபால் கவர்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant Commissioner of Customs, P & E (Marine),
11th Floor, New Customs House,Ballard, Estate, MUMBAI- 400 001.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 17.12.2024.
The post சுங்கவரித்துறையில் 44 இடங்கள் appeared first on Dinakaran.