பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 17: தர்மபுரி மாவட்டம், அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ₹320 கோடி மதிப்பில் ஊத்தங்கரை முதல் ஏ.பள்ளிபட்டி வரையில் நான்கு வழிச்சாலை பணிகள், சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக முடிக்கப்பட்டது. இந்நிலையில், அரூர் அடுத்துள்ள எருமியாம்பட்டி- எச்.புதுப்பட்டி இடையே ₹11 கோடி மதிப்பில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி கடந்தாண்டு தொடங்கி, சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த சுங்கச்சாவடி, நேற்று முதல் செயல்பாட்டிற்கு வரும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்தது. சுங்கச்சாவடியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் சிவராஜ், ஆனந்தசுப்பிரமணியம், அரங்கநாதன், வேலுச்சாமி, சுசீந்திரன், ரஜினி, தமிழ்செல்வன், வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
The post சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.