சுக்காங்கீரை மசியல்

1 week ago 10

தேவையானவை:

துவரம் பருப்பு – 150 கிராம்,
வெந்தயம் – ½ ஸ்பூன்,
சுக்காங்கீரை – 1 கட்டு,
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்,
தக்காளி – 1,
பச்சைமிளகாய் – 3,
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்.

தாளிக்க:

வெந்தயம் – ¼ ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயம் – ½ ஸ்பூன்,
உப்பு – திட்டமாக,
எண்ணெய் – 2 ஸ்பூன்.

செய்முறை:

பருப்பையும், வெந்தயத்தையும் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கீரையை பருப்பு, வெந்தயத்தோடு சேர்த்து 1½ டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 4 விசில் விட்டு வேகவிடவும். பருப்போடு சேர்ந்து கீரை நன்கு குழைந்ததும், மத்தால் கடையவும். திட்டமாக உப்பு சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். குழம்பு பதத்தில் வந்ததும் இறக்கி, தாளிக்கவும். தாளிப்பில் சிறிது பூண்டு, வெங்காயம் விரும்பினால் சேர்க்கலாம்.

The post சுக்காங்கீரை மசியல் appeared first on Dinakaran.

Read Entire Article