சுகாதார இயக்ககத்தில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

3 months ago 22

சென்னை: தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்ட நாளையொட்டி சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் குப்பை போடாமல் தூய்மையை கடைபிடிப்பேன் என்று தூய்மை பாரத உறுதிமொழியை ஏற்றார். அவருடன் அலுவலக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து மரக்கன்று நட்டுவைத்து, தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களுக்கு எல்.முருகன் அளித்த பேட்டி: கடந்த 17ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை சேவை வாரங்களாக கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறோம். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் சுகாதாரம் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. பெண் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் 100 சதவீத கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள பழைய கோப்புகளை சுத்தம் செய்ததில் அரசுக்கு மிகப்பெரிய வருமானம் கொடுத்தது. மக்கள் அனைவரும் சுகாதார இயக்ககத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சுத்தமான காற்று வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நம் நாடு மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது.

The post சுகாதார இயக்ககத்தில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article