சீர்காழி, அக்.11: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தேர்தெற்குவீதியில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மகன்கள் எல்.வி.ஆர். வினோத், எல்.வி.ஆர்.விஸ்வநாத். இவர்கள் சீர்காழி தேர் தெற்கு வீதியில் அழகு கலைக்காக கிரீன் டெண்ட்ஸ் நிறுவனம் தொடங்கி இந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் மயிலாடுதுறை, சிதம்பரம், நாகப்பட்டினம் பகுதிகளிலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த கிரீன் டெண்ட்ஸில் குழந்தைகள், ஆண், பெண்கள் அனைவருக்கும் அழகு கலை சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அழகு கலையை பயிற்றுவிக்கும் சாரம் அகாடமி பியூட்டிசன் கோர்ஸ் சீர்காழியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எல்.வி. ஆர்.வினோத், எல்.வி. ஆர்.விஸ்வநாத் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வேலைவாய்ப்பும், பொதுசேவைகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் மேலும் ஒரு அங்கமாக சீர்காழி அரசமரத்து அடி அருகே நெல்லை கருப்பட்டி காப்பி திறக்கப்பட்டுள்ளது. இங்கு சிறுதானிய உணவுகள் மற்றும் பாரம்பரிய இயற்கை உணவுகள் சிறந்த முறையில் தயாரித்து வழங்கப்படுகிறது. நீங்களும் ஒரு முறை சென்று நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டு மகிழலாம்.
The post சீர்காழியில் அழகு கலையில் சிறந்த கிரீன் டெண்ட்ஸ் appeared first on Dinakaran.