சீரங்கம்பாளையம் தடுப்பணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

6 months ago 16

 

ஈரோடு,நவ.12: சீரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக முறையாக விசாரித்து,சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெருந்துறை தாலுகா சிறுகளஞ்சி சீரங்கம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரது தலைமையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

சீரங்கம்பாளையத்தில் ஒரு தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை, சிறுகளஞ்சி பஞ்சாயத்துக்கு உட்பட்டது. தற்போது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் மூலம் குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படுகிறது. இதனால், குளம், குட்டை மட்டுமின்றி, தடுப்பணையிலும் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தடுப்பணையை, சிலர் சேர்ந்து உடைத்து சேதப்படுத்தினர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு நாங்கள் சென்று தடுப்பணையை உடைக்கக்கூடாது என தடுத்தபோது, எங்களை மிரட்டி விரட்டியனுப்பினர். இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து, தடுப்பணையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

The post சீரங்கம்பாளையம் தடுப்பணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article