சீமான் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு

2 hours ago 2

கரூர்,

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆக.5ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதேபோல, ஆக.14-ம் தேதி தாந்தோணிமலை காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் அனுப்பினார்.

இவற்றில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 7-ம் தேதி இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இந்த வழக்கில் அனுமதி வழங்கி தாந்தோணிமலை காவல் நிலையம் இவ்வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்படி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலையத்தில் நேற்று அவதூறாக பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணைய தளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article