சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

2 hours ago 2

 

புதுக்கோட்டை, ஜன.11: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுவடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவர் பேசிய வீடியோ ஆதாரத்துடன் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் திராவிடர் கழக புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அறிவொளி புகார் ஒன்றை வழங்கியிருந்தார். இந்தப் புகார் பெற்ற கணேஷ் நகர் காவல் துறையினர் தந்தை பெரியார் குறித்து அவதூறாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேசியதாக கூறி மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article