சீமான் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை இப்பிரச்சனையை விடமாட்டோம் :பபாசி கடும் கண்டனம்

4 months ago 12

சென்னை : சீமான் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை இப்பிரச்சனையை விடமாட்டோம் என்று பபாசி தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னை புத்தகக் காட்சியில் நடந்த சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மேலும் நிகழ்வில் பேசிய சீமான், முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பபாசி பொதுச் செயலாளர் முருகன் அளித்த பேட்டியில், “சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக காட்சி பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம். இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பதிப்பகம் திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

பபாசி தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில், “சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே, இது அரசியல் மேடை அல்ல, இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினேன். சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. நீங்கள் அழைத்துவரும் நபர் அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னையும், பதிப்பகத்தையும் முன்னிலைப்படுத்துவதற்கு புத்தகக் காட்சியை அந்த பதிப்பகம் பயன்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் விளக்கத்தைக் கேட்டு, அந்த பதிப்பகம் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் புத்தக வெளியீடுகளின் கட்டுப்பாடுகளை வரையறை செய்வோம். சீமானுக்கு கொள்கைகள் இருக்கும் ஆனால், இது பொதுவான மேடை, இங்கு பேசியதுதான் சிக்கல்.48 வருடத்தில் நடக்காது ஒன்று இப்போது நடந்துள்ளது. புத்தகக் காட்சிக்கு விருந்தினராக வந்த சீமான் எப்படி இதை செய்யலாம்? அவருடைய கண்ணியத்தை காக்கத் தவறிவிட்டார்.சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சீமான் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை இப்பிரச்சனையை விடமாட்டோம் :பபாசி கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article