சீமானின் பேச்சு வேதனையாக உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

3 weeks ago 8

திருச்சி,

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது ,

பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு தொடர்பான அறிக்கை குறித்து சுகாதாரத் துறையுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கல்வியும், சுகாதாரமும் 2 கண்கள் என முதல்-அமைச்சர் தெரிவிப்பது போல இரண்டையும் கவனமாக பார்த்து வருகிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும் என்று சீமான் பேசுவது வேதனைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசியல் என்று வரும் பொழுது கல்வியில் தான் தொடங்குகிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது.கல்விக்கு கூடுதலான நிதிதான் ஒதுக்கி வருகிறோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது 32 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து தற்போது 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article