
பிஜீங்,
சீனா தலைநகர் பீஜிங்கில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மக்களின் பாதுகாப்புக்காக லாக் டவுன் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூறாவளி காற்றால் பீஜிங்கில் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. ரெயில் சேவை பகுதியாக நிறுத்தப்பட்டு, விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் உடை எடை 50க்குள் இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம் காற்றில் அடித்து செல்லப்பட நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள்ளேயே இருக்கும் படி சீன அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
சீன தலைநகர் பீஜிங்கில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடு்ம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் சூறாவளிக்காக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. சீரற்ற வானிலை காரணமாக சீனாவிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சீனா எதிர்கொள்ளும் பெரிய புயல் தாக்கம் என்று கூறப்படுகிறது.