சீனா: முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து - 20 பேர் பலி

1 week ago 4

பெய்ஜிங்,

வடக்கு சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read Entire Article