சீனாவில் புத்தாண்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் லாபா திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் களைகட்டியது. சீன நாட்காட்டியில் கடைசி மாதத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சீன நாட்காட்டியின் கடைசி மாதம் லா. வா என்றால் சீன மொழியில் 8 என பொருள். ஆண்டு இறுதியில் 8 கடவுளுக்கு படையல் இடுவதையே லாபா திருவிழாவாக சீன மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் ஆட்டம், பாட்டத்துடன் விழா களைகட்டியது. லாபா திருவிழாவின் போது லாபா காஞ்சியை நட்பும், சுற்றமும் மகிழ்ச்சி பொங்க சாப்பிடுகின்றனர்.
The post சீனா புத்தாண்டுக்கு முன்னோட்டமாக நடைபெறும் லாபா திருவிழா..!! appeared first on Dinakaran.