சீனா ஓபன் டென்னிஸ்: டேனியல் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

2 months ago 17

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ், பிரான்சின் அட்ரியன் மன்னாரினோ உடன் மோதினார்.

இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் அட்ரியன் மன்னாரினோவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மெத்வதேவ் இத்தாலியின் பிளேவியோ கோபோலி உடன் மோத உள்ளார்.

Read Entire Article