பீஜிங்,
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி), ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சினெர் 6-2 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுளார்.