சீனா ஓபன் டென்னிஸ்; அதிர்ச்சி தோல்வி கண்ட ஜெசிகா பெகுலா

3 months ago 25

பீஜிங்,

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெசிகா பெகுலா யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 4-6, 0-6 என்ற செட் கணக்கில் பாலா படோசாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Read Entire Article