சீனா-இந்தியா ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: ரஷியா

2 weeks ago 4

 மாஸ்கோ,

ரஷியாவில் சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இடையே சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது கிழக்கு லடாக்கில் ரோந்து மற்றும் படை விலக்கல் தொடர்பாக முடிவு எட்டப்பட்டது.இதைத்தொடர்ந்து லடாக் எல்லையில் இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெற்று வருகின்றன. இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பை ரஷியா வரவேற்று உள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறுகையில், 'மோடி-ஜின்பிங் சந்திப்பில் நாங்கள் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. ஆனால் இது ரஷியாவில் நடந்திருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சந்திப்பை முழு மனதோடு வரவேற்கிறோம்' என தெரிவித்தார். எல்லை பிரச்சினை தொடர்பான சீனா-இந்தியா ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் ஒரு நேர்மறை முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Read Entire Article