பெய்ஜிங்: சீனாவில் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்த 3 விண்வெளி வீரர்கள் நேற்று பூமிக்கு திரும்பினார்கள். மோசமான வானிைல காரணமாக டியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்புவதில் அவர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. கடந்த 6 மாதமாக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்று அவர்கள் ஷென்சோ-19 விண்கலம் மூலமாக பூமிக்கு திரும்பினார்கள். டோங்பெங் தரையிறங்கும் தளத்தில் இது பாதுகாப்பாக தரையிறங்கியது.
The post சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர் appeared first on Dinakaran.