சீன சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல்; 3 பேர் பலி

1 month ago 12

பீஜிங்,

சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஒருவர் கத்தியால் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற சிலருக்கும் கத்திக்குத்து விழுந்த்து. இதில் 15 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் நடத்தியவர், லின் என்ற குடும்பப்பெயர் கொண்ட 37 வயதுடைய நபர் என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் தனிப்பட்ட நிதி சுமையால் பாதிக்கப்பட்டு தனது கோபத்தை வெளிப்படுத்த ஷாங்காய்க்கு பயணம் செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, சீனாவின் 75வது தேசிய தினத்தை வார விடுமுறையுடன் இன்று கொண்டாட நகரம் முழுவதும் தயாராகி வரும் நிலையில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article