சிவாஜி கணேசன் பிறந்தநாள்; சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாட்டம்: செல்வபெருந்தகை தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு

2 months ago 18

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள மணி மண்டபத்தில், அவரது திருவுருச் சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் திருவுருவப் படத்திற்கு செல்வபெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் பிறந்தநாள் கேக் வெட்டி ெதாண்டர்களுக்கு வழங்கினார். இதில் காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், பொருளாளர் ரூபி மனோகரன், துணை தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், இலக்கிய பிரிவு தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், கலைப்பிரிவு செயலாளர் சூளை ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.ஜி.ஆர்.திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் நடிகர் ராஜேஷ் கலந்து கொண்டார்.

 

The post சிவாஜி கணேசன் பிறந்தநாள்; சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாட்டம்: செல்வபெருந்தகை தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article