திருத்துறைப்பூண்டி, பிப். 22: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நகர குழு சார்பில் சிவப்பு புத்தக தின வாசிப்பு இயக்கம் நிகழ்ச்சி நடந்தது, நகர செயலாளர் கோபு தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன், சிகப்பு புத்தக தின வரலாறு மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இவ்வியக்கத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சாமிநாதன் நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ்,நகர குழு உறுப்பினர்கள் தண்டபாணி, செல்வம், தமிழ்மணி, கார்த்தி, கோதாவரி, மாதர் சங்கம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வி, இந்திய தொழிற்சங்கமைய பொறுப்பாளர்கள் பாண்டியன், லெனின், கிளை செயலாளர் சண்முகம், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் எம் .தருமையன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் நகரத்தில் தியாகி சிவராமன்நினைவகம், பெரியசிங்களாந்தி ஏ,பி கிளைகள், மற்றும் பெரியநாயகிபுரம், மீனாட்சி வாய்க்கால் தெரு,எம்.பி.கே நகர், 7வது வார்டு உள்ளிட்ட 7 இடங்களில் வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.
The post சிவப்பு புத்தக தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாசிப்பு இயக்கம் appeared first on Dinakaran.