சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட "பராசக்தி" படக்குழு!

4 months ago 22

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்த படமானது கடந்த 1965-ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலானது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 17ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். அதன்படி 'பராசக்தி' படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன், அதர்வா, சுதா கொங்கரா ஆகியோருடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'மதராஸி' மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் 'பராசக்தி' படத்திலிருந்து வாழ்த்துகளும் அப்டேட்களும் வெளியாகின.

Read Entire Article