சிவகங்கையில் சரக்கு வாகனம் மீது அரசு, கடற்படை பேருந்து அடுத்தடுத்து மோதியதில் கடற்படை வீரர் உள்பட 9 பேர் காயம்

4 months ago 26
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் இந்திய கடற்படை வாகனம் உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. மதுரையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று திடீரென பிரேக் அடித்ததில் மழை ஈரத்தால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து பிரேக் அடித்தும் நிற்காமல் சரக்கு வாகனம் மீது லேசாக மோதிய நிலையில் தொடர்ந்து வந்த கடற்படை வாகனம் அரசுப் பேருந்து மீது மோதியது. அதில் கடற்படை வாகன ஒட்டுநருக்கு கால் முறிவும், பேருந்து பயணிகள் 7 பேர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநரும் காயம் அடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Read Entire Article