சிவகங்கையில் கொடூரம்: புல்லட் ஓட்டியதற்காக பட்டியலின கல்லூரி மாணவரின் கைகளை வெட்டிய கும்பல்

3 hours ago 2

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் சிவகங்கையில் இயங்கி வரும் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அய்யாசாமி புல்லட் வாகனம் வைத்துள்ளார். இது மற்ற சமூகத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் அய்யாசாமி நேற்று கல்லூரியிலிருந்து வரும்போது 3 இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்துவிட்டு எப்படி புல்லட் ஓட்டலாம் எனக் கேட்டு அவரின் கைகளை வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அய்யாசாமி தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கைகளை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

அய்யாசாமி குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அந்த இளைஞர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று சரமாரியாக அடித்து நொறுக்கி வீட்டை சூறையாடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article