சென்னை: கோவில் சிலை திருட்டு வழக்கு ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் ₹300 கோடி மதிப்பிலான 41 சிலைகளை கடத்திச் சென்ற வழக்குகளில் உள்ள ஆவணங்கள் காவல் நிலையங்களில் இருந்து காணாமல் போய் உள்ளன. இது சம்பந்தமான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தமிழக அரசை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.