சிறைகளில் வெளிநாட்டு கைதிகளின் நலன் காக்க விதிகளை வகுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்

2 hours ago 2

சென்னை: சிறைகளில் உள்ள வெளிநாட்டு சிறைக்கைதிகளின் நலன் காக்க தகுந்த விதிகளை வகுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் , இது தொடர்பாக மத்திய அரசின் உள்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள நைஜீரியாவைச் சேர்ந்த எக்விம் கிங்ஸ்லி தாக்கல் செய்திருந்த மனுவில், “புழல் சிறையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே வெளிநாட்டு கைதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கும், சிறைத் துறை நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

Read Entire Article