சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த யானை பலி: கை கொடுக்காமல்போன 7 நாள் சிகிச்சை

4 hours ago 3

மேட்டுப்பாளையம்: கோவை சிறுமுகை அருகே உடல் நலம் பாதித்த காட்டு யானை, 7 நாள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது சிறுமுகை. இங்குள்ள கூத்தாமண்டி பிரிவு பகுதியில் 7 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதித்த நிலையில் காட்டுயானை ஒன்று நின்றது. வனச்சரகர் மனோஜ், கோவை மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் ஆகியோர் அறிவுறுதல்பேரில் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

7 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று (செவ்வாய்) காலை காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தான் உள்உறுப்பு பாதிப்பு குறித்து தெரிய வரும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலம் பாதித்த யானை பலி: கை கொடுக்காமல்போன 7 நாள் சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article